ஐபிஎல் முன்னாள் சேர்மன் லலித் , நடிகை சுஷ்மிதா திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதுபற்றிய விளக்கத்தை சுஷ்மிதா தற்போது அளித்துள்ளார்.
2/ 10
லலித் மோடியின் முயற்சி காரணமாக இந்தியாவில் ஐபிஎல் அமைப்பு உருவாக்கப்பட்டு 2008-ல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.
3/ 10
இதன்பின்னர் உலகம் முழுவதும் பிரபலமான நபராக லலித் மோடி இருந்தார்.
4/ 10
பொதுத்தேர்தல் காரணமாக 2009-ல் ஐபிஎல் நடித்த பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்தபோது, அதனை தென்னாப்பிரிக்காவில் நடத்தி அசத்தினார் லலித் மோடி.
5/ 10
பின்னர் பல்வேறு மோசடி புகார்களில் சிக்கிய அவர், வெளிநாட்டில் தற்போது வசித்து வருகிறார்.
6/ 10
இந்நிலையில் மாலத்தீவில் சுற்றுலாவில் இருப்பதாகவும், தன்னுடன் தனது பார்ட்னர் சுஷ்மிதா சென் இருப்பதாகவும் லலித் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
7/ 10
லலித் மோடி பின் செய்து வைத்திருந்த இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
8/ 10
இந்நிலையில் லலித் மோடியுடன் திருமணமா என்ற கேள்விக்கு நடிகை சுஷ்மிதா சென் விளக்கம் அளித்துள்ளார்.
9/ 10
‘நான் சந்தோஷமாக, நான் விரும்பும் நபர்களுடன் இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை. மோதிரம் மாற்றிக் கொள்ளவில்லை.’ இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் என்று சுஷ்மீதா கூறியுள்ளார்.
10/ 10
இந்த விளக்கத்தை அளித்து விட்டு, இனி நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம் என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா.