நடிகை சுனைனா 2006ஆம் ஆண்டு வெளியான ’10th class' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்பு 2008 ஆம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மூலம் தமிழில் சுனைனாவிற்கு தமிழில் ரசிகர் கூட்டம் அதிகரித்தது.
2/ 10
அதையடுத்து ,மாசிலாமணி, வம்சம், திருத்தணி என பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தார்.
3/ 10
விஷ்ணு விஷாலுடன் சுனைனா இணைந்து நடித்த ‘நீர் பறவை’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலம் ஃபேர் விருதை பெற்றார்.
4/ 10
விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சுனைனா.
5/ 10
2019 ஆம் ஆண்டு வெளியான ‘ சில்லுக்கருப்பட்டி’ படத்தில் அமுதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
6/ 10
தற்போது ’எரியும் கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
7/ 10
1989 ஆம் ஆண்டு பிறந்த சுனைனா தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
8/ 10
சுனைனாவின் இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
9/ 10
நடிகை சுனைனா இன்ஸ்டாகிராமில் எப்போதாவது தனது புகைப்படங்களை பகிர்வார்.
10/ 10
சமீபத்தில் மலைகளுக்கு நடுவில ஓய்வெடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சுனைனா ‘ரெஜினா’ என்ற படத்திற்காக ஷூட்டிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.