நடிகை சினேகா தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. அவரும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம்செய்து கொண்டனர். இந்த நட்சத்திர ஜோடிக்கு 2015-ல் விஹான் என்ற மகனும், 2020 ஜனவரியில் ஆத்யந்தா என்ற மகளும் பிறந்தனர். தெலுங்கு படம் ஒன்றில் சினேகாவின் நடிப்பை பார்த்து அசந்து போய் தான், அவர் மீது தான் காதலில் விழுந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் பிரசன்னா. சினேகா தற்போது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படம் வழியாக, சினேகா நடிகர் பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தார். அப்போதிலிருந்ததே பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது 42 வயதாகும் சினேகா, இளம் நடிகைகளுக்கே டஃப் தரும் வகையில் ஃபோட்டோக்களை பகிர்ந்துக் கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவிட்டிருக்கும் படங்கள் லைக்ஸை குவித்து வருகின்றன.