நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது பெயரை மாற்றி விட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
2/ 9
தமிழில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘இவன் தந்திரன்’ படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
3/ 9
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
4/ 9
ஹெ.ச்.வினோத் இயக்கத்தில் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா, மாறா படத்தின் மூலம் மீண்டும் மாதவனுடன் இணைந்தார்.
5/ 9
தற்போது அவர் தனது பெயரை மாற்றியிருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
6/ 9
அது குறித்த பதிவில், “என் பெயரைச் சரியாகச் சொல்பவர்களை நான் பாராட்டுகிறேன். உங்கள் கீ போர்டு தாஸ் அல்லது கபூரைப் பரிந்துரைத்தாலும், உங்கள் உடலின் ஒவ்வொரு இழைகளும் ஸ்ரீநாத் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்று கூறுகிறது
7/ 9
அப்படியான நபர்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்.
8/ 9
இன்ஸ்டாகிராமில் நான் எனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று மாற்றியுள்ளேன். நான் அதை இங்கேயும் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.
9/ 9
ரமா என்பது என் அம்மாவின் பெயர். இனி எல்லா இடங்களிலும் ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.