நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி அஜித் குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதனை அவரது சகோதரியும், நடிகையுமான ஷாமிலி உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் shaliniajithkumar2022 என்கிற யூசர் ஐடியில் ஷாலினி இணைந்திருக்கிறார். 6 நாட்களுக்கு முன்பாக அவர் அஜித்துடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில், அது அதிகாரப்பூர்வ பக்கம்தான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷாலினி இணைந்ததை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அவரை பின்தொடரத் தொடங்கியுள்ளனர். அமர்க்களம் படப்பிடிப்பின்போது அஜித் – ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. இந்த படம் வெளியாகுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே 1999 ஜூனில் அஜித் தனது காதலை ஷாலினியிடம் வெளிப்படுத்தினார். 2000 ஏப்ரல் 24-ல் இருவருக்கும் திருமணம் முடிந்தது. அஜித் – ஷாலினி தம்பதிக்கு ஆத்விக் என்ற மகனும், அனோஷ்கா என்ற மகளும் உள்ளனர். 2001-ல் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் படத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஷாலினி. குடும்பத்தினருடன் அஜித் அஜித் - ஷாலினி அஜித் - ஷாலினி அஜித் - ஷாலினி அஜித் - ஷாலினி