தமிழில் கோமாளி, பப்பி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக கோமாளி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது அவர் கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்த் இயக்கி வருகிறார். சோஷியல் த்ரில்லர் படமான க்ரீமின் செட்டில் ஒரு ரிஸ்க்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது சம்யுக்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்கால் மற்றும் முழங்காலில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்யுக்தா தன்னை வற்புறுத்தி ஆபத்தான சண்டைக்காட்சிகளை தானே செய்ததாக இயக்குநர் அபிஷேக் பசந்த் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் சிகிச்சை குணமடைந்து நடிகை சம்யுக்தா ஹெக்டே வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு மற்றும் புகைப்படம் வைரலாகியுள்ளது. சம்யுக்தா ஹெக்டே தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த இரண்டு நாட்களாக மிக கடினமாக உணர்ந்தேன். எனக்கு என் குடும்பத்தினர் அருகில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இன்று காலை பொழுது சந்தோசமாக ஆரம்பித்துள்ளது என்று சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார் நடிகை சம்யுக்தா ஹெக்டே