இந்திய அளவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறார் சமந்தா. அவரது படங்கள் ஒவ்வான்றும் இந்தியா முழுவதும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருக்கும் சமந்தா சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறிய வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அவரது குடும்பம் குறைவான வருமானத்தால் நிறைய சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள். இருப்பினும் அவரது குடும்பத்தினர் அவரை நன்றாக படிக்க சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் முழு கவனம் செலுத்தியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தனது குடும்பத்துக்கு உதவ சேல்ஸ் கேர்ளாகவும் பணியாற்றியிருக்கிறார். மாடலிங் செய்யத் துவங்கிய அவருக்கு சினிமா வாய்ப்பு வரத் துவங்கியிருக்கிறது. சரியான வாய்ப்புகளை ஏற்று இன்று இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது கல்லூரி கால போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.