நடிகர் விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் நடிகை சமந்தா ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். சமந்தாவின் சமூக வலைதள பதிவு கவனம் பெற்று வருகிறது. ஆக்சன் படங்களிலும் அற்புதமாக நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக சமந்தா மாறியுள்ளார். சமந்தா நடித்துள்ள சகுந்தலா திரைப்படம் இம்மாதம் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமந்தா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்ததாக அமேசான் ப்ரைம் தயாரிக்கும் ஆக்சன் வெப் சீரிஸில் நடிக்கிறார் சமந்தா. இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் சமந்தா நடித்து வந்தார். சமந்தா அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளில் ஒப்பந்தமாகி வருவதால் குஷி படம் என்னவானது என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். இதுபற்றி சமந்தாவிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டபோது, குஷி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும், குஷி படம் தாமதம் ஆகும் சூழலில் அதற்காக சமந்தா விஜய் தேவரகொண்டா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.