ஃபோர்ப்ஸ் இந்தியா பதிப்பின் அட்டைப் படத்தில் சமீபத்தில் நயன்தாராவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.தற்போது நடிகை ரெஜினாவின் புகைப்படங்களை ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ளது. அவரைப் பற்றிய குறிப்புகளும் இதழில் இடம்பெற்றுள்ளன.
2/ 9
தென்னிந்திய நடிகை என குறிப்பிட்டு, அவர் நடித்தப் படங்கள், ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளனர்.
3/ 9
2005 இல் வெளியான தமிழ்ப் படம்' கண்ட நாள் முதல் 'தான் ரெஜினாவின் முதல் படம்.
4/ 9
2010 இல் கன்னடத்தில் ரெஜினா அறிமுகமானார். 2012 இல் தெலுங்கில் முதல் வாய்ப்பு அமைந்தது.
5/ 9
ரெஜினா தெலுங்கில் நடித்த முதல் படம் சிவா மனசுலு ஸ்ருதி. இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சிம்மா விருது ரெஜினாவுக்கு கிடைத்தது.
6/ 9
தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் ரெஜினா அதிகம் நடித்து வருகிறார். கன்னடம், இந்தியில் தலா ஒரு படம் நடித்துள்ளார்.
7/ 9
இந்த வருடம் ரெஜினா நடிப்பில் தலைவி உள்பட நான்குப் படங்கள் வெளியாகி உள்ளன. சூர்ப்பனகை, பார்டர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இவை தவிர இரு தெலுங்குப் படங்களும் வெளியாக இருக்கின்றன.
8/ 9
ரெஜினா சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவரது நடிப்பில் பார்ட்டி, கள்ளப்பார்ட் படங்கள் தயாராகி இன்னும் வெளிவராமல் உள்ளன.
9/ 9
ரெஜினா நடித்துள்ள நாயகி மையப் படமான சூர்ப்பனகையை அவர் மிகவும் நம்பியுள்ளார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் அப்படம் வெளியாகிறது.