மேலும் அவர் கணவர் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், அதில் துரானி தன்னை அடித்ததாக கூறி இருந்தார். இதேபோல தன்னுடைய முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்றுவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ராக்கி சவாந்த், என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்த அதில், அதை நிறைய பேருக்கு விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைமில் உள்ளது. எனக்கு வரும் ஓடிபிக்களை எடுத்து என் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடியுள்ளார் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.