விஜய் சேதுபதி படத்திலிருந்து நடிகை ஒருவர் விலகியுள்ளார்.
2/ 5
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், பக்ஸ் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.
3/ 5
அரசியலை மையப்படுத்தி உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
4/ 5
இந்நிலையில் விஜய் சேதுபதி படத்திலிருந்து நடிகை அதிதி ராவ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கெனவே ‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
5/ 5
கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் அதிதி ராவ் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.