நடிகை ப்ரியா ஆனந்த் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 2009-ல் வெளியான வாமனன் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அறிமுகமானார் ப்ரியா ஆனந்த் 2009-ல் இருந்து தொடர்ச்சியாக இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் நடித்து கவனம் ஈர்த்தார் ப்ரியா ஆனந்த். கன்னட நட்சத்திரம் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்த ஜேம்ஸ் படத்தில் இடம்பெற்றார் ப்ரியா. ப்ரியா ஆனந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அந்தகன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தி படமான அந்தாதூன் படத்தின் ரீமேக்காக அந்தகன் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் குறைவான நேரமே ஆக்டிவாக இருக்கிறார் ப்ரியா.