நடிகை பூஜா ஹெக்டே ஃபாரின் டூரில் பிஸியாக உள்ளார். பூஜா ஹெக்டே இந்தியா திரும்புவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் பூஜா ஹெக்டே. விஜய்யுடன் பூஜா ஆடிய அரபிக் குத்து பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பீஸ்ட் படம் சரியாக அமையாத நிலையில் மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோவுடன் பூஜா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமா துறையில் ஸ்ட்ரைக் நடந்து வரும் நிலையில் ஃபாரின் டூரில் பூஜா பிஸியாக உள்ளார். லண்டன், தாய்லாந்தின் பாங்காக் பயணங்களை முடித்த பூஜா தற்போது அமெரிக்காவை சுற்றி வருகிறார். ஃபாரின் டூர் குறித்த பூஜாவின் பதிவுகள் வைரலாகியுள்ளன. தெலுங்கில் மகேஷ்பாபுவுடனும், இந்தியில் சல்மான் கானுடனும் அடுத்ததாக படத்தில் நடிக்கிறார் பூஜா. சல்மான் கானுடன் நடிக்கும் படம், தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக்காகும். இன்னும் ஒரு வாரத்தில் பூஜா ஹெக்டே இந்தியா திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பூஜா ஹெக்டே பூஜா ஹெக்டே