தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், அழகி ஆகியப் படங்களில் நடித்தவர், நடிகை நந்திதா தாஸ். நிறப்பாகுபாடுகளுக்காக எதிராக தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர், கறுப்பு அழகானது என்றும் வலியுறுத்தி வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “கல்லூரியில் பலர், கறுப்பாக இருந்துக் கொண்டு எப்படி தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள் என பலமுறை கேட்டிருக்கிறார்கள். நான் அந்த கோணத்தில் யோசித்ததே இல்லை என்பதால், அவர்கள் கேட்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். என் பெற்றோர் நிறத்தை என் தலையில் ஏற்றி என்னை வளர்க்கவில்லை. ஆனாலும் நான் அழகு சாதன கடைகளுக்கு செல்லும் போது, ஆண்டி - டேன் கிரீம்களை என்னிடம் நீட்டி, இதைப் போட்டால் நீங்கள் சிவப்பாக முடியும் என்றார்கள். அவர்களிடம் நான், இந்த உடம்பிலே பிறந்தேன், இந்த உடம்பிலே இறப்பேன். எனக்கு எந்த கிரீமும் வேண்டாம் என்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.