இரண்டாவது திருமணம் குறித்த கேள்விக்கு முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை மீனா.
2/ 9
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. அவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார்.
3/ 9
ஜூன் 2009-ல் வித்யாசாகர் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியரை மணந்தார் மீனா.
4/ 9
இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
5/ 9
விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நைனிகா.
6/ 9
மார்ச் 2022-ன் இறுதியில், மீனாவின் கணவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் ஜூன் மாதம் மரணமடைந்தார்.
7/ 9
கணவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில், மீனா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
8/ 9
இதுகுறித்து மீனா கலந்துக் கொண்ட சமீபத்திய நேர்க்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு, ”என்னுடைய கணவர் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதற்குள் எப்படி இது போன்ற வதந்திகள் வெளியாகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
9/ 9
தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவேன். அதேபோல் என் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவேன், இதுதான் எனக்கு முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
19
இரண்டாவது திருமணமா? - நடிகை மீனா ஓபன் டாக்!