மாளவிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்தார். ராம் கோபால் வர்மாவின் டர்னா மானா ஹேய் இந்திப் படம் அவற்றில் முக்கியமானது. ரேவதி, சமீரா ரெட்டி, விவேக் ஓபராய், நானா படேகர் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். மாளவிகா நடித்த இன்னொரு முக்கியமான படம் ரஜினியின் சந்திரமுகி. ஆனால், நயன்தாரா, ஜோதிகா என்ற போட்டியாளர்கள் மத்தியில் மாளவிகா காணாமல் போனார்.