இதில் இன்னொரு சுவாரஸியமான விஷயம், கலைஞானம் புதிய தோரணங்கள் கதையுடன் முதலில் அணுகியவர் பாலுமகேந்திரா. அவரோ மலையாளத்தில் வெளியான 'ஏ' சான்றிதழ் பெற்ற படத்தை உரிமை வாங்கி தமிழில் எடுக்கலாம் என்று சொல்ல, கலைஞானம் பயந்து போய் கர்ணனை ஒப்பந்தம் செய்தார். அவரும் இயக்கம், ஒளிப்பதிவு இரண்டிலும் அடித்துக் கிளப்ப, படம் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்தது.
புதிய தோரணங்கள் படத்தில் மாதவி ஆவியாக வருவார். காதலில் தோல்வியடைந்த ஆவி. கதைப்படி இவர் திருமணங்களுக்கு குதிரையை வாடகைக்கு விடுகிறவர். ஆற்றுக்கு அந்தப் பக்கம் உள்ள கிராமமும், மாதவியின் கிரமமும் பகை கிராமங்கள். அந்தப் பகையை மறந்து ஆற்றங்கரைக்கு அந்தப்பக்கம் உள்ள, குதிரைக்கு லாடம் அடிக்கும் சரத்பாபுவை மாதவி காதலிப்பார். மாதவியின் ஊர் மைனர் இந்தத் திருமணத்தை எதிர்ப்பார். அதை பொருட்படுத்தாமல் மாதவி திருமணத்துக்கு தயாராவார்.
தன்னை மைனரிடமிருந்து பாதுகாக்காத கிராமத்தவரை பழிவாங்க, ஊரில் திருமண மேளச்சத்தம் கேட்டதும், இறந்து ஆவியான மாதவி தனது குதிரைக்குள் புகுந்து திருமண வீட்டை நாசமாக்கி திருமணமே நடக்கவிடாமல் செய்வார். இந்தப் பேய்க் குதிரையை சமாளிக்க முடியாமல் கிராமமே அங்கிருந்து வெளியேறும். மாதவியின் காதலர் சரத்பாபு அவர்களை தடுத்து ஆவியாக இருக்கும் காதலியை எப்படி சமாதானப்படுத்துகிறார் என்பது கதை.
சங்கர் கணேஷ் இசையில் கங்கை அமரன், கலை ஞானம் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. முதல் படத்திலேயே தனது வாளிப்பான தோற்றத்தாலும், அழகிய பெரிய விழிகளாலும் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார் மாதவி. அதற்கு அடுத்த வருடம் கமல் ஜோடியாக ராஜபார்வை படத்தில் நடிக்க, அவரது மார்க்கெட் உச்சிக்குப் போனது. இன்றுவரை நீச்சல் உடையில் மாதவி அடிக்க இன்னொரு நடிகை வரவில்லை எனலாம்.