கேக் றான் மேக்ரான் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லூப்னா அமீர்.
யைச் சேர்ந்த இவர் பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். திருமண செயலி மூலம் நடிகை லூப்னா அமீர், வரன் பார்த்து வந்துள்ளார். அதில் வியாசர்பாடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் ஐடி ஊழியருமான மசியுள்ளாகானின் அறிமுகம் நடிகை லூப்னா அமீருக்கு கிடைத்துள்ளது.
ஒருவரை ஒருவருக்கு பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நட்பாக பழகி வந்துள்ளனர்.
நெருக்கம் உண்டாவதற்குள் மசியுல்லாகானிற்கு ஏற்கனவே திருமணமான தகவல் நடிகை லூப்னாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவரை விட்டு விலகியதாகத் தெரிகிறது.ஆனால் நெருக்கமாக தன்னோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து மசியுள்ளாகான், நடிகை லூப்னாவிற்கு டார்ச்சர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து திருமணம் செய்து கொள்ள மிரட்டுவதாக நடிகை லூப்னா மீது மசியுல்லாகான் பெரவள்ளூர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். திருமண செயலி மூலம் பழக்கமான நடிகை மற்றும் ஐடி ஊழியர் மாறி மாறி புகார் அளிக்கப்பட்ட வழக்கு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.இருவரில் யார் யாரை ஏமாற்றினார்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.