தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசை என்று தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கிரீத்தி ஷெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக மாறியிருப்பவர் நடிகை கிரீத்தி ஷெட்டி 2019-ல் இந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தி மாணவியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். 2021-ல் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த உப்பென்னா படத்தில் கதாநாயகியாக கிரீத்தி ஷெட்டி நடித்திருந்தார். உப்பென்னா படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் கிரீத்தி. நானியுடன் ஷாம் சிங்கா ராய், நாக சைதன்யாவுடன் பங்கார ராஜு உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ஹிட்டானது. தற்போது ராம் பொத்தேனி ஹீரோவாக நடிக்கும் தி வாரியர் படத்தில் கிரீத்தி நடித்துள்ளார். இந்த படத்தை லிங்கு சாமி இயக்கி வருகிறார். வாரியர் படத்தில் இடம்பெற்ற, சிம்பு பாடிய புல்லட் பாடல் தமிழிலும் மெகா ஹிட்டாகியுள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய்யுடன் நடிக்க ஆசையாக உள்ளதென கிரீத்தி விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழிலும் பல படங்களில் இவரை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனர்கள், கதாநாயகர்களுடன் இணைவதால் கிரீத்தியின்மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது.