நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.ஆனால் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். அதனால் தமிழ் சரளமாக பேசுவார். ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகாநதி’ திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்தது. கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினிகாந்த் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். கீர்த்தி சுரேஷிற்கு இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். கீர்த்தி அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை பகிர்வார். சிவப்பு நிற லெஹங்காவில் செம்ம அழகாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இஞ்சி இடுப்பழகி என்று சொல்ல வைக்கும் கீர்த்தி சுரேஷின் போஸ். உடைக்கு ஏற்றது போல் சரியான மேக்கப்பையும் தேர்வு செய்துள்ளார்.மொத்தத்தில் கீர்த்தி சுரேஷின் இந்த லுக் வேற லெவலில் இருக்கிறது.