நடிகை கஸ்தூரி, தான் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். தனது அம்மை தழும்புகளை காட்டியபடி சில படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை தனது குட்டி நண்பர்கள் என்று அழைத்த கஸ்தூரி, இந்த நோய் அதிர்ஷ்டவசமாக தனது கண்களை பாதிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இந்த அடல்ட் சிக்கன் பாக்ஸ் ஒரு உயிர்கொல்லி நோய் என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் மென்மையான சருமம் கொண்ட கஸ்தூரி, தற்போது தனது புதிய இயல்பை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. சமூக வலைதளத்தில் தனது உடல்நிலை குறித்து பதிவிட்ட அவருக்கு, விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி