ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் கங்கனா அறிமுகம் ஆனார். தலைவி படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இவரது நடிப்பில் வெளிவந்த தாகட் என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் கங்கனா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் லாரன்சுக்கு வில்லியாக கங்கனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. நாட்டிய கலைஞராக கங்கனா இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சந்திரமுகி 2 ஷூட்டிங்கில் ஜனவரி மாதம் கங்கனா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்கனா ரனாவத்