ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். ஜான்வி ஜபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ தடாக் ‘ என்ற படம் மூலம் அறிமுகமானார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ஜான்வி கபூருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘குட் லக் ஜெர்ரி’ . இந்த படம் அடுத்த மாதம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் புரோமோஷன் வேலைகளின் ஜான்வி கபூர் பிசியாக இருந்து வருகிறார். ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் உள்ளனர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். பார்வையிலேயே சொக்க வைக்கும் ஜான்வி கபூர்! ஜான்வி கபூர் தனது உடலை செம்ம ஃபிட்டாக மெயிண்டெயின் செய்கிறார் என்பது இந்த புகைப்படத்தில் தெரிகிறது.