குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய நடிகை தான், மறைந்த நடிகை ஸ்ரீதேவி. குறிப்பாக பாலிவுட்டில் தமிழ் நடிகைகள் அரங்கேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழலில் ஹேமாமாலினியைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பல ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கோடிக்கணக்கானவர்களின் இதயத்தை கொள்ளையடித்தார். நடிகை ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து போனார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவியின் சாயலை அப்படியே கொண்டு பிறந்திருக்கிறார் மூத்த மகள் ஜான்வி கபூர். ஜான்வி கபூர் ஏற்கனவே ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து அவை கணிசமான வரவேற்பை பெற்றுள்ளன.
பாலிவுட் நடிகர்கள் நடிகைகளின் மகள்கள் என்ன செய்தாலும், செய்யவில்லை என்றாலுமே அது வைரல் ஆகும். ஆனால் ஒரு நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஜான்வி கபூர் மேற்கொள்ளும் பயணங்கள், பகிரும் புகைப்படங்கள் குறிப்பாக அவருடைய ஃபேஷன் சென்ஸ் மிகவும் பரவலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. பாலிவுட் என்றாலே கவர்ச்சியான ஆடைகளில் தான் நடிகைகள் தோன்றுவார்கள் என்ற நிலை மாறி பல தருணங்களில் ஜான்வி கபூர் பாரம்பரியமான அதே நேரத்தில் மாடர்ன் லுக்கோடு அழகான சேலைகளில் மிக அழகாக காட்சியளித்துள்ளார்.