ஜான்வி கபூர் இந்த வீடியோவில் வீட்டில் பிரம்மாண்ட கதவை திறந்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுகும் தனது அம்மா பார்த்து பார்த்து வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் என கூறிக்கொண்டே வீட்டை சுற்றி காட்டுகிறார். மேலும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த பெயிண்டிங் வீட்டின் எல்லா இடத்திலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
பெரும்பாலான தனது குழந்தை பருவத்தை இந்த வீட்டில் தான் செலவிட்டதாக ஜான்வி கூறிகிறார். நடிகை ஸ்ரீதேவி கண்டிப்பான அம்மா என்பதால் ஜான்வி கபூர் இந்த வீட்டில் தனது பாத்ரூமை பூட்ட அனுமதியில்லையாம். ஏனென்றால் ஜான்வி கதவை சாத்திவிட்டு ஆண் நண்பர்களுடன் உரையாடுவார் என்பதால் ஸ்ரீதேவி பாத்ரூமில் லாக் வைக்கவில்லையாம். அந்த நினைவு பற்றி கூறிய ஜான்வி தற்போது வரை அந்த பாத்ரூமில் லாக் இல்லை என பல நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.