ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்து வளர்ந்துள்ளார். ஐஸ்வர்யா மேனன் கேரளா செண்டமங்களத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோட்டில் தான். அதனால் தமிழ் நன்றாக பேசுவார். சென்னையில் உள்ள காட்டாங்குளத்தூர் SRM கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு காதலில் சொதுப்புவது எப்படி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னட, மலையாள மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான ’தமிழ் படம் 2’ மூலம் பிரபலமானார். 2020 ஆம் ஆண்டு வெளியான நான் சிரித்தால் படம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. ஐஸ்வர்யா மேனனுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்வார் ஐஸ்வர்யா மேனன்.