மேயாத மான் படத்தில் அறிமுகமான இந்துஜா செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்துஜாவின் முதல் படம் மேயாத மான். அதனைத் தொடர்ந்து மெர்க்குரி, பூமராங், மகாமுனி என பல படங்களில் நடித்தார். இதில் மகாமுனியில் அவர் நடித்த விஜி கதாபாத்திரம் அவருக்கு சிறந்த நடிகைக்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. விஜய்யின் பிகில் படத்தில் அவரால் பயிற்சி தரப்படும் கால்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவராக நடித்தார். 2019 இல் வெளியான வெப் தொடர் திரவத்திலும் இந்துஜா நடித்திருந்தார். விஜய் ஆண்டனி நடித்திருக்கும் காக்கி படத்தில் இந்துஜாதான் நாயகி. படம் விரைவில் வெளிவர உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் இந்துஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். நானே வருவேன் பூஜையில் இவரைத் தவிர வேறு பிரபல நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால், இவரே படத்தின் நாயகி என்கிறார்கள். இது இந்துஜாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு தற்போது நடந்துவரும் நானே வருவேன் படப்பிடிப்பில் இந்துஜாவும் கலந்து கொண்டுள்ளார்.