கனகவேல் காக்க , வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஹரிபிரியா. கடைசியாக தமிழில் சசிக்குமாருடன் இணைந்து நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்திருந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த ஹரிப்பிரியா 25க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் 5 கன்னடப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. தெலுங்கிலும் தகிட ககிட, பில்லா ஜமீன்தார், ஜெய் சிம்ஹா போன்ற தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்கும் கேஜிஎஃப் உள்ளிட்ட கன்னடப் படங்களில் நடித்துவரும் வசிஷ்டா நிரஞ்சன் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவரது திருமணமும் நேற்று மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் நடைபெற்றது. சிவராஜ்குமார் உள்ளிட்ட கன்னட திரையுலகினர் இருவரையும் நேரில் வந்து வாழ்த்தினர்.