திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் என்பவருக்கும், நடிகை ஹன்சிகாவுக்கும் கடந்த 4-ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது. இதனிடையே ஹன்சிகா நடிப்பில் தமிழில் பார்ட்னர், ரவுடி பேபி, My Name is Shruthi, 105 உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. மேலும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடித்து வந்த அவர், திருமணத்திற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ள ஹன்சிகா தெரிவித்துள்ளார். மேலும், சினிமா என்னும் தொழிலை திருமணத்திற்கு பிறகு ஏன் நிறுத்த வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.