தனது அம்மா கெளதமியுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் அவரது மகள் சுப்புலட்சுமி. 80-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கெளதமி. 1998-ல் திருமணம் செய்துக் கொண்ட கெளதமிக்கு 1999-ல் ஒரு மகள் பிறந்தார். அவரது பெயர் சுப்புலட்சுமி. தற்போது 23 வயதாகும் சுப்பு சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுகிறது. முதலில் கொழுக் மொழுக்கென இருந்த சுப்பு, தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார். இதற்கிடையே அவர் தனது அம்மாவுடனான சில படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.