நடிகை திவ்ய பாரதி 1992 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 30 வயதாகிறது. திவ்ய பாரதி தனது கல்லூரி படிப்பை ஈரோட்டில் உள்ள பன்னாரி அம்மான் கல்லூரியில் முடித்துள்ளார். மாடலிங் துறை மீது ஆர்வம் உள்ள திவ்ய பாரதி 2015 ஆம் ஆண்டு ‘மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற பட்டத்தை பெற்றார். அதே ஆண்டில் ‘பாப்புலர் நியூ ஃபேஸ் மாடல்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். தொடர்ந்து மாடலிங் துறையில் கலக்கி வந்த திவ்ய பாரதிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ’பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர்’ என்ற பட்டத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டு பேச்சுலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.