இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகை பாவனா என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கேரளாவின் திருச்சூரை சேர்ந்த பாவனா ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை. 2002-ல் நம்மல் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து நடித்த பாவனா, சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதையும் வென்றுள்ளார். 2006-ல் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 2008-ல் கோபிசந்துக்கு ஜோடியாக ஒன்டாரி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 2010-ல், தனது முதல் கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 2018-ல் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பாவனா, தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். அதில் தற்போது 4 படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.