முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள் என நடிகை அனிகா சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 • News18
 • 114

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 214

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  பின்பு  2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அனிகாவிற்கு பட வாய்ப்புகள் தமிழில் குவிந்தது.

  MORE
  GALLERIES

 • 314

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  என்னை அறிந்தால் படத்தில் அஜித் - அனிகா இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால், மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அனிகாவுக்கு வாய்ப்பு அளித்திருந்தார் இயக்குநர் சிவா.

  MORE
  GALLERIES

 • 414

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இதுதவிர தமிழில் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து இருந்தார் அனிகா. பின்னர் தமிழின் முதல் ஜாம்பி படமான மிருதனில் நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாக வந்தார். கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் மாமனிதன்.

  MORE
  GALLERIES

 • 514

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இந்நிலையில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 614

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் புட்ட பொம்மா. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 714

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இதையடுத்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ஓ மை டார்லிங்.  இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா.

  MORE
  GALLERIES

 • 814

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இந்நிலையில், ஓ மை டார்லிங் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லரில் அனிகாவின் லிப் லாக் காட்சிகள் அதிகமாக இடப்பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 914

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இதனை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

  MORE
  GALLERIES

 • 1014

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இந்நிலையில் இதுபோன்ற நெருக்கமான காட்சியில் அனிகா நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தான் ஏன் இதுபோன்ற காட்சியை தேர்ந்தெடுத்தேன்? எதனால் இந்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன் என்பது குறித்தும் நடிகை அனிகா விளக்கமளித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 1114

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  ’ஓ மை டார்லிங்’ ஒரு முழு நீள காதல் திரைப்படம். இதனால் படத்தில் முத்தக் காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாது. இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே லிப்லாக் காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லிவிட்டார்.

  MORE
  GALLERIES

 • 1214

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதுபோன்ற காட்சியில் நடிக்க சம்மதித்தேன், படத்தை பார்க்கும்போது பார்வையாளர்கள் அதனை புரிந்துகொள்வார்கள் என்றும் நடிகை அனிகா விளக்கமளித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 1314

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அனிகாவின் சமீபத்திய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 1414

  நான் இன்னும் குழந்தை என்றே பலர் நினைக்கிறார்கள்... அனிகா சுரேந்திரன் விளக்கம்!

  அந்த பேட்டியில் அனிகா கூறியிருப்பதாவது, நான் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியதில் இருந்து அனைவரும் என்னை இன்னும் குழந்தையாகவே பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு இப்போது 18 வயது முடிவடைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  MORE
  GALLERIES