நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாள படம் மூலம் அறிமுகமானார். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அஜித்திற்கு மகளாக நடித்திருப்பார். தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார். விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாமனிதன் படத்தில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ‘lovefully Yours Veda' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அனிகா சுரேந்திரனுக்கு இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வார். தற்போது ‘நோ மேக்கப் லுக்கில்’ இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருக்கும் அனிகாவின் சன் கிஸ்டு புகைப்படம். இதில் ‘டன்க் அவுட்’ போஸ் கொடுத்து க்யூட்டாக இருக்கிறார் அனிகா.