நடிகை அமலா பால் மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து தெய்வ திருமகள், காதலில் சொதுப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பின்பு வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். 2019 ஆம் ஆண்டு அமலா பால் நடிப்பில் ஆடை படம் வெளியானது.அந்த படத்தில் துணிச்சலான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது நடிகை அமலா பால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். அமலா பால் தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் தயாரிக்கப்படும் ‘காடவர்’ என்ற படத்தில் தானே நடித்துவருகிறார். அமலா பால் தமிழில் அதோ அந்த பறவை போல என்ற படத்திலும், மலையாளத்தில் ஆடு ஜீவிதம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். நடிகை அமலா பாலுக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அமலா பால் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.