நடிகை ஐஸ்வர்யா சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின்பு படங்களில் நடித்து பிரபலமானார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’காக்கா முட்டை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஆறாது சினம், குற்றமே தண்டனை, மனிதன், தர்மதுரை ஆகிய படங்கள் நடித்தார். 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ வேல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் வெளியான ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார். அழகிய வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடைக்கு ஏற்றது போல் அணிகலன்களும் அணிந்து கூடுதல் அழகில் ஜொலிக்கிறார். கேஷ்வல் உடையில் கையில் காஃபி கப் உடன் கூலாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.