நடிகர் சித்தார்த்துடன் காதலா என்பது குறித்த கேள்விக்கு சிம்பு பட நடிகை அதிதி ராவ் பதில் அளித்துள்ளார். இந்தி திரையுலகில் அறியப்படும் நடிகையாக அதிதி ராவ், சிம்புவுடன் செக்கச் சிவந்த வானம், கார்த்தியின் காற்று வெளியிடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாடகியாகவும் அதிதி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிதியும், நடிகர் சித்தார்த்தும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வருகின்றனர். இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ரிலேஷன்ஷிப்பில் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் சித்தார்த் உடனான உறவு குறித்து அதிதி ராவ் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- எனது படங்களில், நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகின்றேன். மக்கள் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். அவர்களை பேசாதீர்கள் என்று நம்மால் தடுக்க முடியாது. மக்கள் ஆர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். நான் எனக்கு பிடித்தவற்றில் கவனமாக உள்ளேன். 2023-இல் அதிதி ராவ் நடிப்பில் 3 வெப் சீரிஸ் மற்றும் ஒரு படம் ஆகியவை வெளியாகவுள்ளன.