பிரதாப் போத்தன் ஒவ்வொரு விஷயங்களையும் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கும் மனிதர் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
2/ 9
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளரும், நடிகருமான கார்த்தி மறைந்த இயக்குனர் பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
3/ 9
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் ஒரு சண்டைக் காட்சி முழுவதும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
4/ 9
அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த முறையில் சொல்லிக் கொடுக்கும் மனிதர். அவரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது என கூறினார்.
5/ 9
அதேபோல் நடிகர் பிரபு பேசுகையில் பிரதாப் போதனை பார்த்து அப்போதைய நடிகர்களுக்கு பொறாமையாக இருக்கும். அந்த அளவிற்கு ஸ்டைலாக உடை அணிவார். ஸ்டைலாக படம் எடுப்பார், பேசுவார்.
6/ 9
மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில் நான் அணிந்த உடை அனைத்தும் பிரதாப் போத்தனின் ஸ்டைல்கள். நல்ல மனிதர், எளிமையாக பழகக் கூடியவர். பிரதாப் போத்தன் இழப்பிற்கு அவரின் குடும்பத்தினருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவேன் என தெரியவில்லை என உருக்கத்துடன் பேசினார்
7/ 9
. அத்துடன் வெற்றி விழா திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் நடிக்க வாய்ப்பு வழங்கினார், அவருடன் நடனம் ஆடவும் பிரதாப் போத்தனே காரணம் எனவும் பிரபு தெரிவித்தார்.
8/ 9
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலை 8 மணி அளவில் தூக்கத்திலேயே காலமானார்.
9/ 9
அவரின் உடல் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.