மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் விக்ரம் உடல்நிலை குறித்து புதிய அப்டேட்
சினிமாவில் டப்பிங் கலைஞராக பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதைக்கு தகுந்தவாறு தன்னுடைய உடல் எடையை ஏற்றி இறக்கி நடிப்பதில் கவனம் செலுத்துவார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2/ 7
சினிமாவில் டப்பிங் கலைஞராக பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கதைக்கு தகுந்தவாறு தன்னுடைய உடல் எடையை ஏற்றி இறக்கி நடிப்பதில் கவனம் செலுத்துவார்.
3/ 7
அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
4/ 7
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
5/ 7
ஆனால் இந்த தகவலை விக்ரமின் மக்கள் தொடர்பு அதிகாரி யுவராஜ் மறுத்துள்ளார். மேலும் நடிகர் விக்ரம் காய்ச்சல் காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
6/ 7
விக்ரம் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கிறார். அத்துடன் கோப்ரா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதில் அவர் கலந்து கொள்வார் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.
7/ 7
இரண்டு தகவல்கள் உள்ள நிலையில் மருத்துவமனை விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளது.