இந்த நிலையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், லியோ படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யின் படத்தை எங்கள் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. தற்போது நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கான கதையைக் கேட்டு வருகிறோம். இது ஆரம்பகட்டத்தில் தான் இருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.