நடிகர் விஜய் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு அவருடைய பெயரில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
2/ 6
குறிப்பாக, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கின்றனர். ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்ட சார்பில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியிருந்தனர்.
3/ 6
இதைத்தொடர்ந்து தற்போது தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அடையாறு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.
4/ 6
அந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார்.
5/ 6
இது தவிர, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு குளிர்காலத்தை முன்னிட்டு இலவச போர்வைகள் வழங்கி வருகின்றனர்.
6/ 6
அதேபோல் குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி ஆகியவற்றையும் பல்வேறு இடங்களில் வழங்கி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.