முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்.

  • 15

    ''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

    தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில், மாவட்டம் கீழடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சுமார் பல கோடி ரூபாய் மதிப்பில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

    MORE
    GALLERIES

  • 25

    ''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

    அதனைத் தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட மக்கள் நாள்தோறும் சென்ற வண்ணம் இருக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வளர்ச்சி, கல்வி, வாழ்க்கை முறை போன்றவற்றைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வத்துடன் கீழடி அருங்காட்சியகம் செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 35

    ''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

    தற்போது, நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தினருடன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளார். நடிகர் சூர்யாவுடன் அவரின் மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகா, தந்தை சிவகுமார் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இணைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை இன்று பார்வையிட்டனர். மேலும் அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    ''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, பெருமிதம்!!! #வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்..

    MORE
    GALLERIES

  • 55

    ''புதிய வரலாறு எழுதப்படும்... தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்'' - கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா

    தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும். அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..குழந்தைகளுடன் அனைவரும் வருக! என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES