நடிகை தற்கொலை வழக்கில் காதலன் மீது பகீர் சாட்டப்பட்ட கடிதம் சிக்கிய போதும், 10 ஆண்டு விசாரணைக்குப் பின் வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு விவரம் என்ன? அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்து 2007ஆம் ஆண்டு பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜியாகான். பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் நிஷாபத் என்ற படத்தின் மூலம் நடிகர் அமிதாப் பச்சனுடன் அறிமுகமாகி முதல் படத்திலேயே மிகப்பெரும் வரவேற்பை பெற்றார். 2008ம் ஆண்டு கஜினி ஹிந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில், நடிகர் அமீர்கானுடன் சேர்ந்து நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் பின் பெரிய வாய்ப்புகள் அமையாத நிலையில், இறுதியாக அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் என்ற படத்தில் நடித்திருந்தார்இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மும்பையில் தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நடிகரும் காதலருமான சூரஜ் பஞ்சோலி தான் தனது இறப்புக்கு காரணம் எனக் கூறி ஜியா கான் எழுதியதாக ஆறு பக்க கடிதம் ஒன்றும் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டது.
காதலர் சூரஜ் பஞ்சோலி தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஜியா தன் கைப்பட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாதகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். மறு மாதமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.இந்த வழக்கில் தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என ஜியாகானின் தாயார் ரபியா கான் குற்றம்சாட்யிருந்தார்.
காதலர் சூரஜ் பஞ்சோலி தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஜியா தன் கைப்பட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாதகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். மறு மாதமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.இந்த வழக்கில் தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என ஜியாகானின் தாயார் ரபியா கான் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிரா காவல்துறையிடம் இருந்து வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.தொடர்ந்து 2015ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 இன் கீழ் சூரஜ் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இறுதி கட்ட விசாரணை அண்மையில் நிறைவடைந்தது.
நடிகர் சூரஜ் பஞ்சோலி குற்றமற்றவர் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் இந்த வழக்கில் இருந்து சூரஜ் பஞ்சோலியை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளாக பாலிவுட்டை மிரட்டி வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜியாகானின் தாயார் ரபியா, தன் மகளுக்காக நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தான் நம்பிக்கையை கைவிடப் போவதில்லை என்றும், தொடர்ந்து போராடுவேன் என்றும் ரபியா தெரிவித்துள்ளார்.