50 வருடங்களை நிறைவு செய்யும் தேச ஒற்றுமையை வலியுறுத்திய பாரத விலாஸ் தேசம் சம்பந்தப்பட்ட எதுவாயினும் முதலில் அது அன்னை இல்லத்தில் இருக்கும் சிவாஜியை சந்தித்தப் பிறகே வேறு முகவரி தேடிச் செல்லும். அப்படி தேசத்துக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு. சிவாஜியும் அப்படித்தான். தேசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அவர் போல் அள்ளிக் கொடுத்த நட்சத்திரங்கள் மிகக்குறைவு.
சீக்கியராக மேஜர் சுந்தர்ராஜன் கம்பீரமான நடிப்பை தந்திருந்தார். படம் நெடுக ஹாஸ்ய மழை பொழிந்தவர்கள் எம்.ஆர்.ஆர்.வாசுவும், மனோரமாவும். நகைச்சுவையுடன் சோகமாகவும் அசத்த முடியும் என்பதை தான் ஏற்று நடித்த இப்ராஹிம் பாய் கதாபாத்திரத்தில் காட்டியிருந்தார் வி.கே.ராமசாமி. இவர்களுடன் தேவிகா, ராஜசுலோச்சனா, சிவகுமார், ஜெயசித்ரா, ஜெயசுதா, எஸ்.வி.ராமதாஸ் உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் இந்திய நாடு என் வீடு... பாடல் இன்றும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாடிக் கொண்டிருக்கிறது.