ஒக்கடு படத்தை தமிழில் ரீமேக் செய்யும்போது தங்கை கேரக்டருக்கு பதிலாக தம்பி கேரக்டரை மாற்றலாம் என இயக்குநர் தரணி திட்டமிட்டாராம். அதற்காக அழகி படத்தில் பார்த்திபனின் சிறு வயது வேடத்தில் நடித்த சதிஷை அழைத்து ஆடிசன் நடத்தியிருக்கிறார். பின்னர் அண்ணன் - தங்கை என்பதே சரியாக இருக்கும் என தன் முடிவை தரணி மாற்றியிருக்கிறார். இதனை சதிஷ் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.