முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

Sarath Babu: நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார்

  • 16

    ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

    தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு.

    MORE
    GALLERIES

  • 26

    ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

    ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

    குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 46

    ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

    தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக வசந்த முல்லை என்ற படம் வெளியாகியிருந்தது. மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் சரத் பாபு நடித்திருக்கிறார். 72 வயதாகும் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 56

    ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

    கடந்த மாதம் நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நோய் தொற்று காரணமாக சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    MORE
    GALLERIES

  • 66

    ஹீரோ முதல் வில்லன் வரை.. நடிகர் சரத்பாபுவின் சினிமா பயணம்!

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 72. அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES