தனது 6 மாத பேரன் அயானுடனான படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகர் ரஹ்மான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் ரஹ்மான். கே.பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் ரஹ்மானுக்கு நிறைய ரசிகர்களைப் பெற்று தந்தது. தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தில் மதுராந்தக சோழனாக நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியின் சகோதரி மெஹ்ருனிஷாவை திருமணம் செய்துக் கொண்ட ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகளின் மகன் அயானுடன் தான் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், ரஹ்மான் தாத்தாவாகிவிட்டாரா என ஆச்சர்யமடைந்துள்ளனர்.