விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சூர்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று கமல் நன்றி தெரிவித்தார்.
2/ 10
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.
3/ 10
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
4/ 10
க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
5/ 10
விக்ரம் படத்தில் சூர்யா நடித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
6/ 10
விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாகுவதற்கான லீடை சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் கொடுத்துள்ளது.
7/ 10
விக்ரம் படத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் கமல் மீது கொண்ட அன்பின் காரணமாக சூர்யா நடித்திருந்தார்.
8/ 10
சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்ததற்காக கமல் தனது சமூக வலைதள பக்கங்களின் வழியே நன்றி தெரிவித்தார்.
9/ 10
இந்நிலையில் சூர்யாவின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று கமல் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சூர்யாவின் தந்தை சிவக்குமார் கமலை ஆரத்தழுவி வரவேற்றார். இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10/ 10
சூர்யாவுக்கு பரிசாக ரோலக்ஸ் வாட்ச்சை கமல் அளித்தார். விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் ரோலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.