Home » photogallery » entertainment » CINEMA ACTOR MURALI BIRTHDAY ATHARVAA FATHER MURALI AGE WIFE AND FAMILY IDHAYAM MURALI MOVIES PUTHU VASANTHAM PAGAL NILAVU SRE
'இதய நாயகன்' டூ 'வெள்ளிவிழா நாயகன்' முரளி பிறந்த நாள் ஸ்பெஷல்!
தமிழ் சினிமாவின் காதல் நாயகன் நடிகர் முரளி. இவரின் பிறந்த நாளான இன்று இவரின் திரைப்பயணங்களை பற்றிய பதிவு.
1984 ஆம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரை உலகில் நுழைந்த முரளிக்கு பூவிலங்கு’ திரைப்படம் அவரின் முதல் தமிழ் திரைப்படமானது. முதல் திரைப்படத்திலேயே தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய முரளி, இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’ வின் நாயகனானார்.
2/ 5
‘கீதாஞ்சலி’ .. ‘வண்ணக்கனவுகள்’ .. என தொடர்ந்து நடித்து கொண்டிருந்த முரளியை தமிழ் சினிமா திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படமாக அமைந்தது இயக்குனர் விக்ரமனின் முதல் திரைப்படமான ‘புதுவசந்தம்’.
3/ 5
முரளியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த மற்றொரு திரைப்படம் ‘இதயம்’. காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கிய முரளி அதுமுதல் ரசிகர்களின் இதயம் நிறைந்தார். தொடர்ந்து கல்லூரி நாயகனாய் பல திரைப்படங்களில் நடித்து ‘வெள்ளிவிழா’ நாயகனும் ஆனார் முரளி.
4/ 5
ஆனந்தம் , சமுத்திரம், வெற்றிக்கொடிகட்டு , பொற்காலம், கனவே கலையாதே, இரணியன் என காதல் திரைப்படங்கள் என்றாலும் சரி, குடும்ப பாங்கான திரைப்படங்கள் என்றாலும் சரி எல்லாவற்றிலும் தனது சிறந்த நடிப்பால் அசத்தி பல ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் ஆனார் முரளி.
5/ 5
2001ம் ஆண்டு பாரதிராஜாவின் ’கடல் பூக்கள்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்ற முரளி, சுந்தரா டிராவல்ஸில் காமடியிலும் ரசிக்க வைத்தார். காதல் திரைப்படங்களுக்கு தனி பாதை காட்டிய முரளி என்றும் தமிழ் சினிமாவின் இதயம் நிறைந்தே இருப்பார்.