நடிகர் மயில்சாமியின் உருவப்படம் மேகநாதீஸ்வரர் கோயில் கருவறையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
2/ 10
தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத காமெடி காட்சிகளில் நடித்திருப்பவர் நடிகர் மயில்சாமி.
3/ 10
மிமிக்ரி கலைஞரான இவர், வடிவேலு, விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களுடன் இணைந்து தனித்துவமான பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார்.
4/ 10
நடிப்பு மட்டுமல்லாமல் ஏழை - எளியோருக்கு உதவிகள் செய்து மக்களிடத்தில் நற்பெயரைப் பெற்றார் மயில்சாமி.
5/ 10
மாணவர்களின் படிப்பு செலவு, மருத்துவ செலவு என முக்கியமான எந்த உதவிகள் கேட்டாலும் மறுக்காமல் செய்பவர்.
6/ 10
ஆன்மிகத்தில் நாட்டம் மிகுந்த மயில்சாமி தீவிர சிவ பக்தரும் கூட.
7/ 10
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயில் நிகழ்ச்சியில் அதிகாலை வரை கலந்துக் கொண்டார்.
8/ 10
பின்னர் அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமி, மாரடைப்பால் மரணமடைந்தார். இது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
9/ 10
மயில்சாமியின் இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் கலந்துக் கொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
10/ 10
தற்போது, மயில்சாமி இறுதியாக சென்று வந்த மேகநாதீஸ்வரர் கோயில் கருவறையில் அவரின் உருவப்படம் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
110
கடைசியாக போன சிவன் கோயில்... கருவறையில் மயில்சாமியின் உருவப்படம் வைத்து வழிபாடு!